நாவலப்பிட்டியில் லொறியில் சிக்குண்டு உதவியாளர் பலி
நாவலப்பிட்டி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள சிறப்பு அங்காடி கிளை ஒன்றுக்கு பொருட்கள் ஏற்றி வந்த லொறியின் பின்பகுதியில் சிக்குண்டு, அதன் உதவியாளர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். குருநாகல் பகுதியிலிருந்து நாவலப்பிட்டியிலுள்ள சிறப்பு அங்காடி கிளை ஒன்றுக்கு உணவுப் பொருட்களை ஏற்றி…
நேபாளத்தில் ஜீப் கவிழ்ந்து விபத்து – 20 பக்தர்கள் உயிரிழப்பு
நேபாளத்தின் ரோல்பா மாகாணம் ஜல்ஜாலா என்ற மலைப்பகுதி உள்ளது. தலைநகர் காத்மாண்டுவில் இருந்து மேற்கே 500 கி.மீ தொலைவில் உள்ள இந்த மலைப்பகுதியின் 3,000 அடி உயரத்தில் புத்த மடாலயம் ஒன்று உள்ளது. இன்று (01) அங்கு புத்த பூர்ணிமா கொண்டாட்டம்…
நிதியமைச்சு அதிகாரியின் மர்ம மரணம் – விசேட குழு நியமனம்
நிதியமைச்சின் உதவிப் பணிப்பாளரின் சந்தேகத்திற்கிடமான மரணம் தொடர்பில் பிரேதப் பரிசோதனையை முன்னெடுப்பதற்காக சட்ட வைத்திய நிபுணர்கள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க, நான்கு சட்ட வைத்திய நிபுணர்களைக் கொண்ட விசேட குழுவொன்றை…
அரச சேவையில் ஊழியர்களை நிரந்தரமாக்கும் சுற்றுநிருபம் வௌியீடு
அரச நிறுவனங்களில் தற்காலிக, நாளாந்த பதில், ஒப்பந்த அல்லது நிவாரண அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்களை சேவையில் நிரந்தரமாக்குவது தொடர்பான 11/2026 இலக்க சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது. பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள இந்தச் சுற்றுநிருபம், அனைத்து அமைச்சின்…
இலங்கை ரூபாயின் பெறுமதி 2.9 சதவீதத்தால் வீழ்ச்சி
2026 ஏப்ரல் மாத இறுதியில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி 2.9% இனால் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. கடந்த பெப்ரவரி இறுதியில் மத்திய கிழக்கில் ஏற்பட்ட மோதல் சூழலைத் தொடர்ந்து, வெளிநாட்டுத் துறையில் ஏற்பட்ட அழுத்தங்கள்…
பாதுகாப்பான பணிச்சூழலை உருவாக்குவதாக பிரதமர் உறுதி
உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான புதிய வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலம் நியாயமான, பாதுகாப்பான பணிச் சூழலை உருவாக்க உறுதிபூண்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். பிரதமர் விடுத்துள்ள மே தின வாழ்த்துச் செய்தியில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையின் தொழிலாளர்…
தோல்வியுறாத பயணத்திற்காக பணியாற்றுவோம் – ஜனாதிபதி
உத்தேச கல்விச் சீர்திருத்தங்கள், டிஜிட்டல் பொருளாதாரத் திட்டம், ‘Clean Sri Lanka’ திட்டம், ‘சமூக சக்தி’ திட்டம் போன்றவை இதற்காகவே நடைமுறைப்படுத்தப்படுகின்றன. நாடு இழந்த அபிவிருத்தியை மீட்டெடுத்து “வளமான நாடு – அழகான வாழ்க்கை” யை கட்டியெழுப்பும் திட்டத்தில், உழைக்கும் மக்களை…
ஏப்ரலில் பணவீக்கம் அதிகரிப்பு
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான முதன்மை பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் 5.4 சதவீதமாக அதிகரித்துள்ளது. தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான…
பங்களாதேஷை வீழ்த்தியது இலங்கை!
பங்களாதேஷிற்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இலங்கை மகளிர் அணி 21 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில், இன்னும் ஒரு போட்டி மீதமிருக்க, இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று தொடரைத்…
புகையிலை அற்ற எதிர்கால சந்ததி – புதிய பரிந்துரைகள் சமர்ப்பிப்பு
2010 ஆம் ஆண்டிற்குப் பின்னர் பிறந்த அனைத்துப் பிள்ளைகளையும் புகையிலை பாவனையற்ற ஒரு தலைமுறையாக மாற்றுவதற்கான பரிந்துரைகள் அடங்கிய கருத்துருத் தாள், சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.இந்த வேலைத்திட்டமானது புகையிலை மற்றும் மதுசாரம் மீதான தேசிய அதிகார சபையினால் தயாரிக்கப்பட்டுள்ளதுடன்,…
