கரையோர ரயில் போக்குவரத்துக்கு பாதிப்பு

கரையோர ரயில் மார்க்கத்திலான போக்குவரத்து நடவடிக்கைகள் வெலிகம வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்று (21) பிற்பகல் 02.05 மணியளவில் மாத்தறையிலிருந்து மருதானை நோக்கிப் பயணித்த ரயில் ஒன்று, கம்புருகமுவ மற்றும் வெலிகம ரயில் நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டுள்ளது.…

பழைய முச்சக்கர வண்டிகளை மின்சார முறைக்கு மாற்ற புதிய திட்டம்

பழைய எரிபொருள் முச்சக்கர வண்டிகளை மின்சார முறைக்கு மாற்றுவதற்கான விசேட வேலைத்திட்டமொன்றை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிரிஷாந்த அபேசேன தெரிவித்துள்ளார். மேலும், முச்சக்கர வண்டிகளின் மேற்கூரையில் சூரிய சக்தி தகடுகளை பொருத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக…

யாழ். குருநகர் கடலில் 17 வயதுச் சிறுவனின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம் – குருநகர் கடற்பரப்பில் இன்று (22) காலை சிறுவன் ஒருவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் குருநகர் பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய ஜோர்ஜ் ஸ்ரிபன் மதிவாணன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த சிறுவன் நேற்று இரவு, அப்பகுதியில் உள்ள கடலட்டைப்…

கரூர் சம்பவத்தின் பின் நாளை மக்களை சந்திக்கும் விஜய்!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கலந்து கொள்ளும் உள்ளரங்கு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி, நாளை (23) ஞாயிற்றுக்கிழமை காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெறவுள்ளது. இது குறித்து கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள…

கடுகன்னாவ மண்சரிவு பலி எண்ணிக்கை 6 – மீட்பு பணிகள் நிறைவுக்கு

பஹல கடுகன்னாவ, கனேதென்ன பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இந்த அனர்த்தத்தில் சிக்கியிருந்த நிலையில் காயமடைந்து மீட்கப்பட்ட 4 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. பாதுகாப்பு படையினர், பொலிஸார்,…

இலங்கைக்கு சிம்பாப்வே நிர்ணயித்த வெற்றி இலக்கு

இலங்கை, பாகிஸ்தான் மற்றும் சிம்பாப்வே அணிகள் மோதும் முத்தரப்பு இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகள் மோதும் போட்டி தற்சமயம் இடம்பெற்று வருகிறது. ராவல்பிண்டியில் இடம்பெறும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில்…

நாளைய பொதுக் கூட்டத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்துத் திட்டம்

மிரிஹான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனந்த சமரகோன் திறந்தவெளி அரங்கில் நாளை (21) நண்பகல் நடைபெறவுள்ள பொதுக் கூட்டம் காரணமாக வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இப்பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் பாராளுமன்ற உறுப்பினர்கள், முக்கிய பிரமுகர்கள், அரசியல்…

ஓட்டமாவடி சபையை கைப்பற்றியது மக்கள் காங்கிரஸ்!

கோரளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபையின் புதிய தவிசாளராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்ட எம்.எஸ்.ஹலால்தீன் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதன்போது, ஐக்கிய தேசிய கட்சி, சுயேட்சை உறுப்பினர், இலங்கை தமிழரசு கட்சி உறுப்பினர்…

பாடசாலை மாணவர்களிடையே புகைத்தல் அதிகரிப்பு

பாடசாலை மாணவர்களிடையே புகைத்தல் பழக்கம் அதிகரித்துள்ளதாகப் பேராதனை போதனா வைத்தியசாலையின் சுவாச நோய்கள் தொடர்பான விசேட வைத்தியர் துமிந்த யசரத்ன தெரிவித்துள்ளார். அவர் கருத்துத் தெரிவிக்கையில், 14 அல்லது 15 வயதிற்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் பலர் சிகரெட்டுகளைப் பரிசோதித்துப் பார்க்க முனைகின்றனர்…

வெளிநாட்டவர்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரக் கட்டணங்கள் திருத்தம்

வெளிநாட்டவர்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கான கட்டணங்களைத் திருத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சரான பிமல் ரத்நாயக்கவினால் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, வெளிநாட்டு பிரஜை ஒருவருக்கு ஒரு மாத காலத்திற்கான…