வெள்ளத்தால் பாதிப்படைந்த கிணறுகளை சுத்தப்படுத்தும் பணிகள் ஆரம்பம்

வெள்ள நிலைமை காரணமாக பாதிப்படைந்த கிணறுகளை மீண்டும் பயன்படுத்தக்கூடிய வகையில் சுத்தப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை நீர் வழங்கல் சபை ஆரம்பித்துள்ளது. அதற்கமைய, கொழும்பு பிரதான அலுவலகத்தின் ஊடாக கொழும்பு, கம்பஹா, இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களும், புத்தளம் மாகாண அலுவலகத்தின் ஊடாக…

உயிரிழந்த விமானியின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கிக்கொண்டிருந்த போது வென்னப்புவ, லுணுவில பகுதியில் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த விமானி குரூப் கப்டன் நிர்மால் சியம்பலாபிட்டியவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இறுதி அஞ்சலி செலுத்தினார். அவரது பூதவுடல் வைக்கப்பட்டுள்ள இரத்மலானையில் உள்ள…

மின்சாரம் தாக்கி மின்சார சபை ஊழியர் பலி

சீரற்ற வானிலை காரணமாக தடைப்பட்ட மின்சார விநியோகத்தை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த மின்சார சபை ஊழியர் ஒருவர், ஹெட்டிபொல பகுதியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். நேற்று (03) பகல் போவத்த – வீரபொகுண பகுதியில் மின் தடையை சீர்செய்து கொண்டிருந்த போதே…

ஊவாவில் ஒருநாள் சம்பளத்தை வழங்கும் அரச ஊழியர்கள்

ஊவா மாகாண சபையின் அரச உத்தியோகத்தர்கள், தமது ஒரு நாள் சம்பளத்தை அந்த மாகாணத்தின் மீள் கட்டமைப்புப் பணிகளுக்கான நன்கொடையாக வழங்கத் தீர்மானித்துள்ளனர். மாகாணத்திலுள்ள அனைத்து அரச உத்தியோகத்தர்களும் இதற்குத் தமது விருப்பத்தைத் தெரிவித்துள்ளதாக ஊவா மாகாண பிரதம செயலாளர் அனுஷா…

ஏவிஎம் சரவணன் காலமானார்

ஏவிஎம் நிறுவனத்தின் உரிமையாளரும், தயாரிப்பாளருமான ஏ.வி. எம் சரவணன் வயது மூப்பின் காரணமாக தமது 86 வயதில் இன்று (4) காலமானார். சிறிது காலமாக வயது மூப்பினால் ஏற்படும் உடல்நல பிரச்சினை காரணமாக சிகிச்சை பெற்று வந்த ஏவிஎம் சரவணன் இன்று…

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் கடுகன்னாவ பகுதி மீண்டும் மூடல்

வாகன போக்குவரத்திற்காக திறக்கப்பட்டிருந்த கொழும்பு – கண்டி பிரதான வீதியில் பயணிப்பதற்கு மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பஹல கடுகன்னாவ – கனேதன்ன பகுதியிலும், கடுகன்னாவ நகரிலும் குறித்த வீதி மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். எவ்வாறாயினும் அத்தியாவசிய பணிகளில் ஈடுபடும் வாகனங்கள் மாத்திரம்…

சிவனொளிபாதமலை யாத்திரை இன்று ஆரம்பம்

இம்முறை சிவனொளிபாதமலை பருவ கால யாத்திரை இன்று (04) ஆரம்பமாகிறது. இன்று ஆரம்பமாகும் இந்த யாத்திரையானது, அடுத்த ஆண்டு வெசாக் பௌர்ணமி தினம் வரை நடைபெறும். 2025 – 2026 ஆம் ஆண்டுக்கான யாத்திரை ஆரம்பத்தை குறிக்கும் வகையில், ஸ்ரீ சுமன…

மூடப்பட்டிருந்த 159 பிரதான வீதிகள் மீண்டும் திறப்பு

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த நிலைமை காரணமாகப் போக்குவரத்திற்குத் தடைப்பட்டிருந்த 159 பிரதான வீதிகள் மீண்டும் போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்துள்ளது. இவ்வாறு திறக்கப்பட்ட முக்கிய வீதிகள் வருமாறு: A-004: கொழும்பு – இரத்தினபுரி –…

பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு 25,000 ரூபா உதவி

வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்கள் ஒவ்வொருவருக்கும், அவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக 25,000 ரூபாவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. குறித்த நிதியை ஜனாதிபதி நிதியத்திலிருந்து வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை, அனர்த்தத்தினால் பாதிக்கப்படாத மாகாணங்கள்…

2026 ஆம் ஆண்டுக்கான லிட்ரோ எரிவாயு குறித்த தீர்மானம்

லிட்ரோ எரிவாயு லங்கா நிறுவனத்திற்கு 2026 ஆம் ஆண்டிற்கான திரவ பெற்றோலிய எரிவாயுவை கொள்வனவு செய்வதற்காக, 2024 ஆம் ஆண்டின் கொள்வனவு வழிகாட்டல்களின் விதிமுறைகளுக்கு அமைய, இரட்டை உறை முறையின் கீழ் தொழில்நுட்ப மற்றும் நிதி ஏலங்கள் கோரப்பட்டுள்ளன. அதன்படி, 05…