அமெரிக்கா மீது நம்பிக்கை ஏற்படவில்லை – ஈரான் சபாநாயகர்

பாகிஸ்தான் பேச்சுவார்த்தையில் ஈரானிய தூதுக்குழுவுக்குத் தலைமை தாங்கிய ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் மொஹமட் பாகர் கலிபாப், அமெரிக்கா எமது நம்பிக்கையைப் பெற முடியுமா இல்லையா என்பதைத் தீர்மானிக்க வேண்டிய நேரம் இது என்று தெரிவித்துள்ளார். X தளத்தில் பதிவிட்டுள்ள கலிபாப், பேச்சுவார்த்தைக்கு…

விபத்துக்களில் ஒரே வாரத்தில் 49 பேர் பலி!

கடந்த ஏப்ரல் 04ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரையிலான ஒரு வார காலப்பகுதியில் மட்டும் இடம்பெற்ற வாகன விபத்துகளில் சிக்கி 49 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்விபத்துகளில் பெரும்பாலானவை போதைப்பொருள் உட்கொண்டு வாகனம் செலுத்தியமையாலேயே ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர…

யாழில் வாலிபர் தற்கொலை

யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாகப் பலமுறை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு வந்த இளைஞர் ஒருவர், ஐந்தாவது முறையாகத் தூக்கிட்ட நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார். கோண்டாவில், சென் செபஸ்டியன் வீதியைச் சேர்ந்த மகேந்திரநாதன் பார்த்தீபன் (27 வயது) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார். இச்சம்பவம் குறித்து மேலும்…

ஈரான் – அமெரிக்க அமைதிப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை

ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தையில் அமெரிக்கா நன்நோக்கத்துடனே கலந்துகொண்டதாக அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் 12 மணித்தியாலங்களுக்கும் மேலாக நீடித்த இந்தப் பேச்சுவார்த்தையின் பின்னர், முதன்முறையாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் நிபந்தனைகளுக்கு…

இலங்கை நிலக்கரி நிறுவன காரியாலயத்திற்கு சீல் வைப்பு

2009 ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்ட நிலக்கரி இறக்குமதிகள் குறித்து ஜனாதிபதி செயலாளர் செய்த முறைப்பாட்டிற்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து, இன்று பிற்பகல் விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்த இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் காரியாலயத்திற்கு குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள்…

புதையல் தோண்டிய விசேட அதிரடிப்படை வீரர் உட்பட நால்வர் கைது

மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரிய புல்லுமலை பிரதேசத்தில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட விசேட அதிரடிப்படை வீரர் ஒருவர் உட்பட நால்வர் இன்று (11) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து பூஜை பொருட்கள், புதையல் தோண்டுவதற்குப் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் மற்றும்…

கற்பிட்டியில் 907 கிலோ கிராம் கடத்தப்பட்ட உலர்ந்த மஞ்சள் மீட்பு

கற்பிட்டியின் பங்களவத்தை மற்றும் சேதவாத்தை கடற்கரைப் பகுதிகளில் இந்த மாதம் 06 மற்றும் 07 ஆகிய திகதிகளில் இலங்கை கடற்படையினர் முன்னெடுத்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் 907 கிலோ கிராம் உலர்ந்த…

மேற்காசியப் பிராந்தியப் போர்நிறுத்தத்தை வரவேற்கிறது இலங்கை

மேற்காசியப் பிராந்தியத்தில் தற்காலிகப் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டமையை இலங்கை அரசாங்கம் வரவேற்றுள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறித்தும் அரசாங்கம் தனது மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பிராந்தியத்தில் நிலவும் அமைதியற்ற சூழலைத் தணிப்பதற்கான ஒரு தீர்க்கமான நடவடிக்கையாக இதனை…

வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பியது ஆர்டெமிஸ் II

ஆர்டெமிஸ் II (Artemis II) திட்டத்தின் கீழ் வரலாற்றுச் சிறப்புமிக்க நிலவுப் பயணத்தை மேற்கொண்ட ஒராயன் (Orion) விண்கலம், தனது நிலவு ஆய்வுப் பணிகளை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பியுள்ளது. அதன்படி, ஒராயன் விண்கலம் இலங்கை நேரப்படி இன்று (11)…

மதுபான போத்தலை இலஞ்சமாக பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் கைது

மதுபானப் போத்தல் ஒன்றை இலஞ்சமாகப் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டின் பேரில், தர்மபுரம் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இலஞ்ச ஊழல் விசாரணை அதிகாரிகளினால் நேற்று (9) கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த ஒருவரால் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் இந்தக்…