ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கதமது பதவிகளைப் பொருட்படுத்தாது, நாட்டின் சட்டத்திற்கு அனைவரும் கீழ்ப்படிய வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.

மாத்தளையில் இன்று நடைபெற்ற விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.எந்தவொரு அந்தஸ்தையும் பாராது, தவறு செய்பவர்களுக்கு எதிராகச் சட்டம் பாரபட்சமின்றி நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி இதன்போது உறுதிபடத் தெரிவித்தார்.

இதனிடையே, தற்போது சட்டம் தன் கடமையைச் செய்யும்போது, தம்மை சட்டத்துக்கு மேலானவர்கள் என கருதியவர்களால் அதனைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், எந்தவொரு விசாரணையிலும், ஒருவரது பெயர் குறிப்பிடப்பட்டால், அவரிடமிருந்து கட்டாயம் வாக்குமூலம் பெறப்படுவது கட்டாயம் என்றும், “எனது பெயர் குறிப்பிடப்பட்டிருந்தால், என்னிடம் வாக்குமூலம் ஒன்றைப் பெற முடியாதா? பெறவேண்டும்” இங்கு வாக்குமூலம் வழங்குவதை ஒரு பேரழிவாகக் கருதும் கலாசாரம் இனி நாட்டுக்குத் தேவையில்லை என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கூறியுள்ளார்.