இந்த ஆண்டு 12 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும், அவர்களில் 12 வயதுக்குட்பட்ட 2 சிறுவர்களும் அடங்குவதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இன்று (04) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் உரையாற்றிய சமூக வைத்திய நிபுணர் வைத்தியர் பிரஷிலா சமரவீர, கொழும்பு மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலேயே குறித்த இரு சிறுவர்களின் மரணங்களும் பதிவாகியதாக தெரிவித்தார். இதற்கிடையில், இந்த ஆண்டில் இதுவரையில் 25,846 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பெய்யும் மழையினால் சுற்றியுள்ள சூழலில் உருவாகும் கொசுக்கள் எளிதில் இனப்பெருக்கம் செய்வதால், டெங்கு கொசுக்களின் பரவல் அதிகரித்து வருவதாகவும், அதற்கேற்ப டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாகவும் வைத்தியர் பிரஷிலா சமரவீர மேலும் தெரிவித்தார்.

By RifkaNF