ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி பதவியிலிருந்து டிம் குக் விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 2026 செப்டம்பர் 1ஆம் திகதி முதல் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய தலைமை நிறைவேற்று அதிகாரியாக ‘ஜோன் டர்னஸ்’ (John Ternus) பொறுப்பேற்கவுள்ளார். அவர் தற்போது நிறுவனத்தின் வன்பொருள் பொறியியல் (Hardware Engineering) பிரிவின் சிரேஷ்ட துணைத் தலைவராகப் பணியாற்றி வருகிறார். இதேவேளை, CEO பதவியிலிருந்து விலகும் டிம் குக், ஆப்பிள் நிறுவனத்தின் பணிப்பாளர் சபையின் நிறைவேற்றுத் தலைவராக (Executive Chairman) நியமிக்கப்படவுள்ளதாகவும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
