Month: April 2026

கமநல சேவை நிலையங்கள் விடுமுறை நாட்களிலும் திறப்பு

சிறு போக நெற்செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு உரங்களை விநியோகிப்பதற்காக, கமநல சேவை நிலையங்கள் விடுமுறை நாட்களிலும் திறந்திருக்கும் என விவசாய அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்தத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தம்மிக ரணதுங்க வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

குஷ் போதைப்பொருளுடன் விமான நிலையத்தில் ஒருவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுமார் 25 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ‘குஷ்’ ரக போதைப்பொருளுடன் நபர் ஒருவர் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் நேற்று மதியம் தாய்லாந்தின் பேங்கொக் விமானம் மூலம் இந்த போதைப்பொருளை நாட்டிற்கு கொண்டு வந்துள்ளார்.…

இணையவழி நிதி மோசடியில் ஈடுபட்ட 147 வௌிநாட்டவர்கள் கைது

இணைய வழியில் நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 147 வௌிநாட்டு பிரஜைகளை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேகநபர்கள் சிலாபம் இரணவில பகுதியில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்து இந்த குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்த நிலையில் கைதாகியுள்ளனர். சீனா, பங்களாதேஷ் மற்றும் வியட்நாம் உள்ளிட்ட…

ஹோர்முஸ் நீரிணை தொடர்பில் ஈரானின் நிலைப்பாடு

முக்கிய எண்ணெய் போக்குவரத்து பாதையான ஹோர்முஸ் நீரிணை வழியாக, ஆக்கிரமிப்பாளர் நாடுகளுக்குச் சொந்தமில்லாத மற்றும் அவர்களுடன் தொடர்பில்லாத கப்பல்கள் செல்வதற்கு ஈரான் அனுமதிப்பதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சின் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியில் எமது அதிகாரிகளுடன்…

53 ஆண்டுகளுக்கு பிறகு நிலவுக்கு பயணம்…

மனிதர்கள் கடைசியாக நிலவுக்குப் பயணம் செய்து அரை நூற்றாண்டுக்கும் மேலான நிலையில், இன்று (02) அதிகாலையில் 4 விண்வெளி வீரர்கள் விண்வெளி பயணத்தை தொடங்கியுள்ளனர். நாசாவின் விண்வெளி ஏவுதல் அமைப்பின் மீது பயணித்த ஓரியன் விண்கலம், புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி…

கலடுவாவையில் 20 நாட்களுக்கு மாத்திரமே நீர் எஞ்சியுள்ளது.

கொழும்பு நகரம் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளுக்கு சுத்தமான குடிநீரை வழங்கும் பிரதான நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் ஒன்றான கலடுவாவ நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இன்னும் 20 நாட்களுக்கு மாத்திரமே நீர் எஞ்சியுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின்…

பிரபல பாகிஸ்தான் வீரருக்கு அபராதம்!

அனுமதியின்றி நண்பர்களை பாகிஸ்தான் வீரர் ஷாகின் அப்ரிடி அழைத்து வந்த நிலையில் அவர் மீது அபராதம் விதித்து கிரிக்கெட் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மற்றும் பி.எஸ்.எல். தொடரில் லாகூர் கலாண்டர்ஸ் அணியின் அணி…

பாடசாலை ஒழுக்கம் தொடர்பாக புதிய சுற்றறிக்கை!

பாடசாலைகளில் ஒழுக்கத்தைப் பேணுவது தொடர்பாக கல்வி அமைச்சு புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தச் சுற்றறிக்கையானது, அனைத்து மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள், கோட்ட மட்ட பணிப்பாளர்கள் உதவிக் கல்வி பணிப்பாளர்கள், பரிவேணாதிபதி தேரர்கள் மற்றும் அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாடசாலைகளில் ஒழுக்கத்தைப்…

இந்தோனேசியாவில் நிலநடுக்கம் – இலங்கைக்கு பாதிப்பில்லை…

கிழக்கு இந்தோனேசியாவில் இன்று (02) காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால், இலங்கை எவ்வித பாதிப்பும் இல்லை என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார். கிழக்கு இந்தோனேசியாவில் உள்ள டெர்னாட் நகரின் கடற்கரைக்கு அப்பால், வடக்கு பகுதி கடலில்…

எரிசக்தி மூலங்களை இலங்கைக்கு வழங்க ரஷ்யா இணக்கம்

இலங்கையில் நெருக்கடிகள் ஏற்பட்டாலும் இல்லாவிட்டாலும், எரிபொருள், எரிவாயு மற்றும் நிலக்கரி உள்ளிட்ட எரிசக்தி மூலங்களை இலங்கைக்கு வழங்குவதற்கு ரஷ்யா தமது விருப்பத்தை வெளியிட்டுள்ளது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், அமைச்சர் பிமல் ரத்நாயக்க ரஷ்யாவிற்கு மேற்கொண்ட…