Category: வெளிநாட்டு செய்திகள்

16 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடக தடை இந்தோனேசியா மற்றும் கர்நாடகா அறிவிப்பு

இந்தோனேசியாவிலும் 16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்ய அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மார்ச் மாதம் 28ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்தத் தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படும் என அந்நாட்டின் தொடர்பாடல் மற்றும் டிஜிட்டல் விவகார அமைச்சு…

இஸ்ரேலை தாக்க களமிறக்கப்பட்ட ஈரானின் அதிநவீன ஏவுகணை!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிராக நடத்தும் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஈரான் தனது அண்டை நாடுகளுக்கு எதிராகத் தொடுக்கும் தாக்குதல்களை தற்போது மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. இவ்வாறானதொரு பின்னணியில், இஸ்ரேலின் டெல் அவிவ் (Tel Aviv) மீது நடத்திய தாக்குதல்களுக்காக தாமாகவே…

அமெரிக்கா – ஈரான் இரகசியப் பேச்சுவார்த்தை: நெதன்யாகு சந்தேகம்

இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையிலான மோதல் நிலைமைக்கு மத்தியில், அமெரிக்காவும் ஈரானும் இரகசியப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாக இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சந்தேகம் வெளியிட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தமக்குத் தெரியாமல் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அரசாங்கம் ஈரானுடன் போர்நிறுத்தம்…

சைப்பிரஸ் மீதான ட்ரோன் தாக்குதல்: ஈரானில் இருந்து ஏவப்படவில்லை

சைப்பிரஸின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள பிரித்தானிய இராணுவத் தளம் மீது தாக்குதல் நடத்திய ஆளில்லா விமானம், ஈரானில் இருந்து ஏவப்படவில்லை என அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சின் அறிக்கையை மேற்கோள் காட்டி,, சர்வதேச ஊடகங்கள் இந்தத் தகவலை…

ட்ரம்பைக் கட்டுப்படுத்தும் பிரேரணை அமெரிக்க செனட் சபையில் தோல்வி!

ஈரானுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேற்கொள்ளும் இராணுவ நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்காக அந்நாட்டு செனட் சபையில் முன்வைக்கப்பட்ட பிரேரணை தோல்வியடைந்துள்ளது. குறித்த பிரேரணைக்கு எதிராக 52 வாக்குகளும், ஆதரவாக 47 வாக்குகளும் கிடைத்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கு ஒத்திவைப்பு

ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் அரச இறுதிச் சடங்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஈரான் அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மூன்று நாட்கள் நடைபெறவிருந்த இந்த இறுதிச் சடங்கு இன்றைய தினம் ஆரம்பமாகவிருந்தது. எவ்வாறாயினும், நிகழ்வை நடத்துவதற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள்…

ஈரானிய போர்க்கப்பலை நாமே மூழ்கடித்தோம்: அமெரிக்கா அறிவிப்பு

சர்வதேச கடற்பரப்பில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்பட்ட டொர்பிடோவைப் (Torpedo) பயன்படுத்தி ஈரானிய கப்பல் ஒன்றை மூழ்கடித்ததாக அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் பீட்டர் ஹெக்செத் தெரிவித்துள்ளார். எனினும், தாக்குதலுக்கு உள்ளான ஈரானிய கப்பலின் பெயரை அவர் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை. இதேவேளை,…

அமெரிக்க விமானத் தளம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்

மத்திய கிழக்கிலுள்ள மிகப்பெரிய அமெரிக்க இராணுவத் தளமான அல் உதைத் (Al Udeid) விமானத் தளம் மீது ஈரானிய ஏவுகணை ஒன்று தாக்கியுள்ள போதிலும், உயிர்ச்சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று கட்டார் தெரிவித்துள்ளது. ஈரானில் இருந்து தமது நாட்டுக்கு ஏவப்பட்ட மற்றுமொரு…

சவுதி அரேபியாவிலுள்ள CIA மையம் மீது ட்ரோன் தாக்குதல்

சவுதி அரேபியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக (CIA) மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ரியாத்தில் உள்ள தூதரக வளாகத்தின் மீது இரண்டு ட்ரோன்கள் தாக்குதல் நடத்தியதை அமெரிக்காவும் சவுதி அரேபியாவும் உறுதிப்படுத்தியுள்ள போதிலும், இத்தாக்குதலின்…

போருக்கு மத்தியில் ஈரானில் நிலநடுக்கம்

ஈரானின் கெராஷ் (Gerash) பகுதியில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 4.3 ஆகப் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம் 10 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஈரானுக்கு எதிராக…