Category: வெளிநாட்டு செய்திகள்

கரூர் சம்பவத்தின் பின் நாளை மக்களை சந்திக்கும் விஜய்!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கலந்து கொள்ளும் உள்ளரங்கு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி, நாளை (23) ஞாயிற்றுக்கிழமை காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெறவுள்ளது. இது குறித்து கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள…

இஸ்ரேல் தாக்குதலில் லெபனானில் 13 பேர் பலி

இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானின் தெற்கில் உள்ள பாலஸ்தீனிய அகதிகள் முகாம் அருகே சுமார் 13 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. பாலஸ்தீன ஆயுதக் குழுவான ஹமாஸின் உறுப்பினர்கள் பயிற்சியில் ஈடுபட்ட சந்தர்ப்பத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம்…

கொங்கோவில் அமைச்சருடன் 20 பேர் பயணித்த விமானம் விபத்து

ஜனநாயகக் குடியரசு கொங்கோ நாட்டின் சுரங்கத்துறை அமைச்சர் லூயிஸ் வட்டும் கபாம்பா உள்ளிட்ட சுமார் 20 பேருடன் பயணித்த விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. கொல்வேசி விமான நிலையத்தில் (Kolwezi) தரையிறங்கும் போது, விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி தீப்பற்றுதலுக்குள்ளானதாக சர்வதேச ஊடகங்கள்…

DNA கட்டமைப்பைக் கண்டறிந்த ஜேம்ஸ் வொட்சன் காலமானார்

DNA கட்டமைப்பைக் கண்டறிவதில் முன்னோடியாகத் திகழ்ந்த அமெரிக்க விஞ்ஞானியும் நோபல் பரிசு பெற்றவருமான ஜேம்ஸ் வொட்சன் (James Watson) காலமானார். அவர் இறக்கும்போது 97 வயதில் இருந்தார். 20 ஆம் நூற்றாண்டின் மிகச்சிறந்த கண்டுபிடிப்புகளில் ஒன்றாகக் கருதப்படும் DNA இன் இரட்டைச்…

சுரேஷ் ரெய்னா, ஷிகர் தவானின் சொத்துக்கள் முடக்கம்!

ஒன்லைன் சூதாட்டச் செயலியை விளம்பரப்படுத்தியதாக இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான சுரேஷ் ரெய்னா மற்றும் ஷிகர் தவான் ஆகிய இருவரின் சுமார் 11 கோடி இந்தியா ரூபாய் மதிப்பிலான சொத்துகளை அந்நாட்டு அமுலாக்கத் துறை முடக்கம் செய்துள்ளது. ஒன்லைன் சூதாட்டச்…

நியூயோர்க் நகரத்தின் முதல் முஸ்லிம் மேயர் தெரிவு

நியூயோர்க் நகரத்தின் வரலாற்றில், முதல் முஸ்லிம் மேயராக ஸோஹ்ரான் மாம்டானி தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் நியூயோர்க் நகரத்தின் முதல் முஸ்லிம் மேயர் மட்டுமன்றி, மிக இளம் வயதுடைய மேயர்களில் ஒருவராகவும், தெற்காசிய வம்சாவளியைச் சேர்ந்த முதல் தலைவர் என்ற பெருமையையும் பெறுகிறார்.…

பிலிப்பைன்ஸை தாக்கிய சூறாவளி – 58 பேர் பலி

பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கிய கல்மேகி என்ற சூறாவளி காரணமாக பெய்த கனமழையுடன் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி 58 பேர் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வெள்ளத்தில் சிக்கி சுமார் 300 வீடுகள் சேதம் அடைந்தன. பல கார்கள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டன.…

அமெரிக்காவில் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே வெடித்து சிதறிய விமானம்

அமெரிக்காவின் கென்டக்கியில் உள்ள லூயிஸ்வில் முஹம்மது அலி சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, UPS நிறுவனத்திற்குச் சொந்தமான சரக்கு விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. இந்த விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மெக்டொனல் டக்ளஸ் MD-11 ரகத்தைச் சேர்ந்த…

தான்சானியாவில் வெடித்தது மோதல்: 700 பேர் பலி என அச்சம்

தான்சானியாவில் ஜனாதிபதி தேர்தல் முடிவை ஏற்க மறுத்து வெடித்த வன்முறையில் கடந்த 3 நாட்களில் 700 பேர் இறந்திருக்கலாம் என எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன. கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் நேற்று கடந்த 29 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடந்தது. அதில்…

இந்தியப் பெருங்கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இந்தியப் பெருங்கடலில் இன்று அதிகாலையில் 6.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) அறிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் மக்கள் வசிக்காத பகுதியில் ஏற்பட்டுள்ளதால், எந்தவொரு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை. USGS தரவுகளின்படி, நிலநடுக்கம்…