Category: உள் நாட்டு செய்திகள்

சிந்துஜா மரணம் தொடர்பில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர்களில் மூவர் கைது

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்த மரியராஜ் சிந்துஜா என்ற பட்டதாரியான இளம் குடும்ப பெண் மரணத்துடன் தொடர்புடையதாக பணி நீக்கம் செய்யப்பட்ட வைத்தியர் ஒருவர் உள்ளடங்களாக ஐவரில் மூவர் இன்றைய தினம் (9) கைது செய்யப்பட்டுள்ளதாக…

ரத்தனகொல்ல மலையில் பாரிய தீப்பரவல்

பலாங்கொடை, ஹால்பே ரத்தனகொல்ல மலையில் இன்று (08) திடீரென தீப்பரவல் ஏற்பட்டது. நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக இந்த தீ வேகமாக பரவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. தீப்பரவலுக்கான காரணம் இன்னும் தெரியவராத நிலையில், தீயை அணைக்க இராணுவத்தினரும் உள்ளூர்வாசிகளும் இணைந்து பணியாற்றி…

நாட்டில் மீண்டும் தலைத்தூக்கும் மலேரியா

இலங்கையில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 5 பேருக்கு மலேரியா நோய் தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். அவர் இன்று விடுத்துள்ள ஊடக அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில்…

A/L மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் வௌியானது

2024 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையின் மீள்மதிப்பீட்டு பெறுபேறுகள் இன்று (07) வெளியிடப்பட்டுள்ளன. பெறுபேறுகளை இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களானwww.doenets.lkஅல்லதுwww.results.exams.gov.lkஇல் பரீட்சை எண் அல்லது தேசிய அடையாள அட்டை எண்ணை உள்ளீடு செய்து பெற்றுக்கொள்ளலாம். இந்த மீள்மதிப்பீட்டு பெறுபேறுகளின்…

பொலிஸாரின் அதிரடி சோதனையில் 800 பேர் கைது

நாடு முழுவதும் நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பாக 838 பேர் கைது செய்யப்பட்டனர். இதில், குற்றங்களில் நேரடியாக ஈடுபட்ட 20 பேரும், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 675 பேரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். போதைப்பொருள் மற்றும் குற்ற…

12 கிலோ குஷ் போதைப்பொருளுடன் விமான நிலையத்தில் சிக்கிய மூவர்

குஷ் போதைப்பொருளுடன் இரண்டு பெண்கள் உட்பட சந்தேக நபர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் இன்று (07) காலை விமான நிலைய வருகை முனையத்தில் நடத்தப்பட்ட சோதனையின் போது சந்தேக நபர்கள் கைது…

இலங்கையில் நாளொன்றுக்கு 8 பேர் தற்கொலை செய்துகொள்வதாக தகவல்

பல்வேறு சமூகக் காரணிகளால் பாடசாலை மாணவர்கள் தற்போது ஓரளவு மன அழுத்தத்தை அனுபவித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த வருடம் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் இந்த விடயம் தெரியவந்ததாக சுகாதார அமைச்சின் உளநலப் பணிப்பாளர் காரியாலயத்தின் பதில் பணிப்பாளர் சமூக…

இலங்கை மின்சார திருத்தச் சட்டமூலம் 96 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

இலங்கை மின்சார திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு இன்று (6) பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இதில் சட்டமூலத்திற்கு ஆதரவாக 121 வாக்குகளும் எதிராக 25 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய, 96 பெரும்பான்மை வாக்குகளால் இலங்கை மின்சார திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

புலமைப்பரிசில் பரீட்சை மேலதிக வகுப்புகளுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை

ஓகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி நடைபெறவுள்ள புலமைப்பரிசில் பரீட்சையை கருத்தில் கொண்டு, இன்று (06) நள்ளிரவுக்குப் பின்னர் பரீட்சை முடியும் வரை புலமைப்பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புக்களை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பரீட்சார்த்திகளுக்கான மேலதிக கல்வி வகுப்புகளை ஏற்பாடு செய்து…

மன்னாரில் இளையோர் முன்னெடுத்த ‘கருநிலம் பாதுகாப்பு’ மண் மீட்பு போராட்டம்!

மன்னார் மாவட்டத்தில் பல்தேசிய நிறுவனங்களின் இல்மனைட் கனிம மணல் சுரண்டல் களினால் மக்களின் வாழ்விடங்கள் மற்றும் பூர்வீக நிலங்கள் அழிவடையும் அபாயம் காணப்படுகின்ற நிலையில் குறித்த நடவடிக்கைகளை கண்டித்து, மன்னார் மாவட்ட இளையோர் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த விழிப்புணர்வு போராட்டம் இன்று…