Category: உள் நாட்டு செய்திகள்

உயிரிழந்த விமானியின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கிக்கொண்டிருந்த போது வென்னப்புவ, லுணுவில பகுதியில் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த விமானி குரூப் கப்டன் நிர்மால் சியம்பலாபிட்டியவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இறுதி அஞ்சலி செலுத்தினார். அவரது பூதவுடல் வைக்கப்பட்டுள்ள இரத்மலானையில் உள்ள…

மின்சாரம் தாக்கி மின்சார சபை ஊழியர் பலி

சீரற்ற வானிலை காரணமாக தடைப்பட்ட மின்சார விநியோகத்தை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த மின்சார சபை ஊழியர் ஒருவர், ஹெட்டிபொல பகுதியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். நேற்று (03) பகல் போவத்த – வீரபொகுண பகுதியில் மின் தடையை சீர்செய்து கொண்டிருந்த போதே…

ஊவாவில் ஒருநாள் சம்பளத்தை வழங்கும் அரச ஊழியர்கள்

ஊவா மாகாண சபையின் அரச உத்தியோகத்தர்கள், தமது ஒரு நாள் சம்பளத்தை அந்த மாகாணத்தின் மீள் கட்டமைப்புப் பணிகளுக்கான நன்கொடையாக வழங்கத் தீர்மானித்துள்ளனர். மாகாணத்திலுள்ள அனைத்து அரச உத்தியோகத்தர்களும் இதற்குத் தமது விருப்பத்தைத் தெரிவித்துள்ளதாக ஊவா மாகாண பிரதம செயலாளர் அனுஷா…

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் கடுகன்னாவ பகுதி மீண்டும் மூடல்

வாகன போக்குவரத்திற்காக திறக்கப்பட்டிருந்த கொழும்பு – கண்டி பிரதான வீதியில் பயணிப்பதற்கு மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பஹல கடுகன்னாவ – கனேதன்ன பகுதியிலும், கடுகன்னாவ நகரிலும் குறித்த வீதி மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். எவ்வாறாயினும் அத்தியாவசிய பணிகளில் ஈடுபடும் வாகனங்கள் மாத்திரம்…

மூடப்பட்டிருந்த 159 பிரதான வீதிகள் மீண்டும் திறப்பு

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த நிலைமை காரணமாகப் போக்குவரத்திற்குத் தடைப்பட்டிருந்த 159 பிரதான வீதிகள் மீண்டும் போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்துள்ளது. இவ்வாறு திறக்கப்பட்ட முக்கிய வீதிகள் வருமாறு: A-004: கொழும்பு – இரத்தினபுரி –…

பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு 25,000 ரூபா உதவி

வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்கள் ஒவ்வொருவருக்கும், அவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக 25,000 ரூபாவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. குறித்த நிதியை ஜனாதிபதி நிதியத்திலிருந்து வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை, அனர்த்தத்தினால் பாதிக்கப்படாத மாகாணங்கள்…

2026 ஆம் ஆண்டுக்கான லிட்ரோ எரிவாயு குறித்த தீர்மானம்

லிட்ரோ எரிவாயு லங்கா நிறுவனத்திற்கு 2026 ஆம் ஆண்டிற்கான திரவ பெற்றோலிய எரிவாயுவை கொள்வனவு செய்வதற்காக, 2024 ஆம் ஆண்டின் கொள்வனவு வழிகாட்டல்களின் விதிமுறைகளுக்கு அமைய, இரட்டை உறை முறையின் கீழ் தொழில்நுட்ப மற்றும் நிதி ஏலங்கள் கோரப்பட்டுள்ளன. அதன்படி, 05…

சாரதி அனுமதிப்பத்திர சேவைகள் இன்று முதல் வழமைக்கு

சீரற்ற வானிலை காரணமாக தடைப்பட்டிருந்த மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் சாரதி அனுமதிப்பத்திரக் கணினி முறைமை தற்போது முழுமையாகச் சீர்செய்யப்பட்டுள்ளதாக அத்திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, வேரஹெர பிரதான அலுவலகம் மற்றும் நாட்டின் அனைத்துப் பிரதேச அலுவலகங்களிலும் எந்தவிதமான சாரதி அனுமதிப்பத்திர புதுப்பித்தல்…

பயிர்ச் சேதங்களுக்கான நட்டஈட்டை துரிதப்படுத்த நடவடிக்கை

நாடு முழுவதும் நிலவிய சீரற்ற வானிலை மற்றும் வெள்ள நிலைமைகள் காரணமாக ஏற்பட்ட பயிர்ச் சேதங்கள் தொடர்பான நட்டஈட்டை வழங்கும் செயல்முறையை துரிதப்படுத்த விவசாய மற்றும் விவசாய காப்பீட்டுச் சபை நடவடிக்கை எடுத்துள்ளது. அந்த சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்டாயக் காப்பீட்டின்…

ஆபத்தான மரங்களை அகற்ற அவசர இலக்கங்கள் அறிமுகம்

நிலவும் அனர்த்த நிலைமை காரணமாக வீதித் தடைகள் அல்லது அனர்த்தங்கள் ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படும் அகற்றப்பட வேண்டிய மரங்கள் இருப்பின், அது குறித்து அறிவிப்பதற்காக சுற்றாடல் அமைச்சின் கீழ் இயங்கும் அரச மரக் கூட்டுத்தாபனம் பல தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,…