Category: உள் நாட்டு செய்திகள்

போதைப்பொருளுடன் சிவனொளிபாதமலை சென்ற 322 பேர் கைது

இம்முறை சிவனொளிபாதமலை யாத்திரை காலம் ஆரம்பிக்கப்பட்டது முதல் இதுவரையான காலப்பகுதியில், அப்பிரதேசத்திற்கு போதைப்பொருட்களைக் கொண்டு சென்ற 322 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹட்டன் பிரிவின் ஹட்டன், பொல்பிட்டிய, கினிகத்தேன மற்றும் நல்லதண்ணி ஆகிய பொலிஸ் நிலையங்களினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போதே, இந்த…

தலசீமியா தொடர்பில் வைத்தியர்கள் எச்சரிக்கை!

இலங்கையில் சுமார் 2,500 தலசீமியா நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என்றும், ஆண்டுதோறும் 45 முதல் 60 வரையான குழந்தைகள் தலசீமியா பாதிப்புடன் பிறக்கின்றனர் என்றும் சுகாதார அமைச்சின் தொற்றா நோய் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் ஸ்ரீனி அலஹப்பெரும தெரிவித்துள்ளார்.இம்மாதம் 8ஆம் திகதி உலக…

இபோலா மற்றும் ஹண்டா வைரஸ்கள் குறித்து WHO தலைவர் அறிக்கை!

ஆபத்தான ஹண்டா வைரஸ் மற்றும் இபோலா வைரஸ் பரவலானது, ‘அபாயகரமான மற்றும் பிளவுகளை ஏற்படுத்தும் காலப்பகுதியில்’ ஏற்பட்டுள்ள புதிய நெருக்கடிகள் என்று உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார். ஜெனீவாவில் ஆரம்பமான உலக சுகாதார அமைப்பின்…

பருவமழை ஆரம்பம் – பலத்த மழைக்கு வாய்ப்பு

நாட்டில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை படிப்படியாகத் தாபிக்கப்பட்டு வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என…

டித்வாவில் மாயமான முச்சக்கரவண்டி 171 நாட்களின் பின் மீட்பு

டித்வா புயல் நிலைமை காரணமாக ஊவா பரணகம, மஸ்பன்ன நகருக்கு அருகில் மண் சரிவில் சிக்கிப் புதையுண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று 171 நாட்களுக்குப் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மஸ்பன்ன நகரின் பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக, அதற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த…

ரயில் பாதையின் பாகங்களை அகற்றியவருக்கு விளக்கமறியல்

வனவாசல மற்றும் களனி ஆகிய புகையிரத நிலையங்களுக்கு இடையிலான ரயில் பாதையின் பாகங்களைக் கழற்றிய சந்தேக நபரும், அந்தப் பாகங்களை கொள்வனவு செய்த நபரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேகநபர்கள் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த…

டித்வா நிவாரண மோசடி – கிராம சேவகர் பணிநீக்கம்

மொனராகலை மாவட்டத்தில் டித்வா இழப்பீட்டு வழங்கல் தொடர்பாகக் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள அனர்த்த நிவாரண சேவை அதிகாரியின் பணி தற்காலிகமாகப் இடைநிறுத்தப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிக்கை ஒன்றில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இக்குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய கிராம சேவகரும் விசாரணைகளுக்குப்…

சீரற்ற வானிலையால் 141 வீடுகள் பகுதியளவில் சேதம்!

நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக 141 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கடந்த 10ஆம் திகதி முதல் இன்று (16) வரையான காலப்பகுதிக்குள் இந்த அளவிலான பகுதியளவு சேதமடைந்த வீடுகள் பதிவாகியுள்ளதாக அந்த நிலையம்…

ரயில் தடம் புரள்வு, பயணிகள் பெட்டி கவிழ்ந்து விபத்து!

வனவாஸல மற்றும் ஹூணுபிட்டிய ஆகிய நிலையங்களுக்கு இடையிலான ரயில் மார்க்கத்தில் ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளது. இந்த தடம் புரள்வு காரணமாக ரயிலின் பெட்டி ஒன்று ரயில் மார்க்கத்தில் கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில் 12 பயணிகள் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் விபத்து நடந்த…

மண்சரிவு அபாய எச்சரிக்கை: பல மாவட்டங்களுக்கு அறிவுறுத்தல்

தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, மண்சரிவு அபாய எச்சரிக்கையைப் புதுப்பிக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) நடவடிக்கை எடுத்துள்ளது. இன்று (15) மாலை 4.00 மணி முதல் நாளை (16) மாலை 4.00 மணி வரை செல்லுபடியாகும் வகையில்…