Category: ஏனையவை

அமெரிக்காவில் வேகமாக பரவும் புதிய வகை கொரோனா வைரஸ்!

அமெரிக்காவில் BA.3.2 என அழைக்கப்படும் சிகாடா வகை கொரோனா வைரஸ் பரவி வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இது ஓமிக்ரான் வைரஸின் ஒரு துணை வகையாகும். இந்த வகை வைரஸ் முதல்முதலில், கடந்த 2024 இல் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. இந்நிலையில் அமெரிக்காவின்…

நீருக்கடியில் இயங்கிய சட்டவிரோத மதுபான நிலையம்

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிரயாதீவு பிரதேச வாவியை அண்டிய அடர்ந்த காட்டுப் பகுதியில் நீருக்கடியில் சூட்சூமமான முறையில் நீண்ட நாட்களாக இயங்கி வந்த சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் ஒன்று பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. நேற்று (30) முன்னெடுக்கப்பட்ட இந்த சுற்றிவளைப்பில்…

அணுசக்தி விண்கலத்தை செவ்வாய்க்கு அனுப்ப நாசா திட்டம்

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா தமது சந்திரன் மற்றும் செவ்வாய் கிரக வியூகத்தில் ஒரு பெரிய மாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளது. சந்திரனைச் சுற்றி வரும் விண்வெளி நிலையத் திட்டங்களைக் கைவிட்டு, அதற்குப் பதிலாக அடுத்த ஏழு ஆண்டுகளில் 20 பில்லியன் அமெரிக்க…

ஜனாதிபதியின் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன் நிறைவில் தலைப்பிறை கண்ட பின்னர் கொண்டாடும் ஈதுல் பித்ர் பெருநாளானது, இஸ்லாமிய நாட்காட்டியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சந்தர்ப்பமாகும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.…

மசகு எண்ணெய் பீப்பாய் விலை 180 டொலரை கடக்கும் அபாயம்

ஹோர்முஸ் நீரிணையில் நிலவும் தடைகள் ஏப்ரல் இறுதி வரை தொடருமானால், ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை 180 அமெரிக்க டொலர்கள் வரை உயரும் அபாயம் உள்ளதாக சவுதி அரேபிய அதிகாரிகளை மேற்கோள்காட்டி வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த…

இந்து சமுத்திரம் மோதல் வலயமாக இருக்கக் கூடாது – நாமல்

இந்திய பெருங்கடல் ஒரு மோதல் வலயமாக அன்றி, நாகரிகங்களுக்கு இடையிலான ஒரு பாலமாகவே காணப்பட்டதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்தியாவின் புதுடெல்லியில் இன்று (18) நடைபெற்ற வியோன் (WION) சர்வதேச மாநாட்டில்…

எரிவாயு ஏற்றிய இரண்டு கப்பல்கள் நாட்டை வந்தடைந்தன

திரவ பெற்றோலிய எரிவாயு ஏற்றிய இரண்டு கப்பல்கள் இன்று (18) காலை உஸ்வெட்டகெய்யாவ, தல்தியவத்தையில் உள்ள எரிவாயு இறக்கும் மிதவையை வந்தடைந்துள்ளன. அதிலிருந்து எரிவாயுவை தரையிறக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக “அத தெரண” செய்தியாளர் தெரிவித்துள்ளார்.இதேவேளை, நேற்று (17) இடம்பெற்ற விசேட…

98வது ஒஸ்கார் விருதுகள்!

சினிமா உலகில் தலைசிறந்த விருதாக கருதப்படும் ஒஸ்கார் விருதுகள் அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆண்டுதோறும் நடைபெறும் உலகப்புகழ்பெற்ற திரைப்பட விருது விழாவாகும். திரைத்துறையில் மிகச்சிறந்த பங்களிப்பை வழங்கும் கலைஞர்கள் மற்றும் படங்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த விருதினை பெறுவது…

ஐ.நா பாதுகாப்புச் சபையில் ரஷ்யாவின் தீர்மானம் தோல்வி

மத்திய கிழக்கு பிராந்தியத்தின் தற்போதைய போர் சூழல் தொடர்பாக ரஷ்யாவினால் முன்வைக்கப்பட்ட தீர்மானம், ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் நிறைவேற்றப்படாமல் தோல்வியடைந்துள்ளது.இதேவேளை, வளைகுடா நாடுகள் மீது ஈரான் மேற்கொண்டு வரும் தாக்குதல்களைக் கண்டித்து ஐநா பாதுகாப்புச் சபையில் சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவாக…

இஸ்ரேலிலுள்ள இலங்கைத் தொழிலாளர்களுக்கு எச்சரிக்கை

இஸ்ரேலில் வசிக்கும் இலங்கைத் தொழிலாளர்கள், சமூக வலைதளங்கள் மற்றும் மின்னஞ்சல்களைப் பயன்படுத்தும்போது அறிமுகமில்லாத செய்திகளுக்குப் பதிலளிப்பதைத் தவிர்க்குமாறு அங்குள்ள இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது. சைபர் தாக்குதல்கள் நடத்தப்படுவதற்கான அபாயம் காணப்படுவதால், இலங்கைத் தொழிலாளர்கள் இது குறித்து அவதானமாக இருக்க வேண்டும் என…